மூட்டுவலிக்கு ஊசி போட்டுக்கொண்ட சிறுவன்... உயிரைப் பறித்த சோகம்! நடந்தது என்ன?

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் மூட்டு வலிக்கு ஊசி போட்டுக்கொண்ட 12 வயதுச் சிறுவன் உயிரிழந்த சோக நிகழ்வு நடந்துள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த களம்பூரைச் சேர்ந்த நரேஷ் என்ற 12 வயதுச் சிறுவனுக்கு அடிக்கடி மூட்டு வலி ஏற்பட்டதால் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேருந்து நிலையம் எதிரே உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், மருத்துவர்கள் ஊசி போட்ட சிறிது நேரத்தில் சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அங்கிருந்து உடனடியாக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அச்சிறுவன் உயிரிழந்தார். இது குறித்து சிறுவனின் தாய் ஜெயசித்ரா செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com