புதிய அமைச்சராக பதவியேற்ற டிஆர்பி.ராஜா: 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் - எந்த துறை யாருக்கு?

தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக டிஆர்பி.ராஜா பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
cm stalin
cm stalinptdesk

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

ராஜ்பவனில், இன்று காலை 10:30 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டிஆர்பி.ராஜா அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

minister trb raja
minister trb rajapt desk

முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில், 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில், புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஆர்பி.ராஜாவுக்கு தொழில்துறை வழங்கப்பட்டுள்ளது. பிடிஆர் கவனித்து வந்த நிதித்துறை மற்றும் மனித வள மேலாண்மைத் துறை தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

minister ptr
minister ptrpt desk

அதேபோல், அமைச்சர் மனோ தங்கராஜ் கவனித்து வந்த தொழில் நுட்பத்துறை பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் நாசரிடம் இருந்த பறிக்கப்பட்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்க்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இருந்த தமிழ் வளர்ச்சித்துறையை அமைச்சர் சாமிநாதன் கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ள டிஆர்பி.ராஜா, சிறப்பாக பணியாற்றி முதல்வரின நன்மதிப்பை பெற வேண்டும் என்று அமைச்சர் டிஆர்பி ராஜாவின் தந்தையும், எம்பியுமான டிஆர்.பாலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

minister ptr
minister ptrpt desk

அதேபோல் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிதித்துறை பொறுப்பு வழங்கியதற்கும், தற்போது எழுச்சிமிக்க புதிய பொறுப்பை வழங்கி மக்களுக்காக பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ள என் தலைவர் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு சிறப்பாக செயல்பட்டு மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன் என்றும் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ட்வீட் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com