\
பொறையார் விபத்து: உயிரிழந்தவர்களுக்காக போக்குவரத்து தொழிலாளர்கள் அஞ்சலி

பொறையார் விபத்து: உயிரிழந்தவர்களுக்காக போக்குவரத்து தொழிலாளர்கள் அஞ்சலி

பொறையார் விபத்து: உயிரிழந்தவர்களுக்காக போக்குவரத்து தொழிலாளர்கள் அஞ்சலி
Published on

நாகை பொறையார் போக்குவரத்து பணிமனையின் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களுக்காக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து தொழிலாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.

நாகப்பட்டினம் மாவட்டம், பொறையார் போக்குவரத்து பணிமனையின் மேற்கூரை நேற்று இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் சில காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகின்றனர்.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போக்குவரத்து தொழிலாளர்கள் அஞ்சலி செலுத்தினர். சென்னை போக்குவரத்து பணிமனை முன்பு திரண்ட ஏராளமான போக்குரத்து தொழிலாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பணிமனை முன்பு தொழிலாளர்கள் அஞ்சலி செலுத்தி, நேற்று காலை 4 மணி முதல் 7 மணி வரை பேருந்து இயக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலும் போக்குவரத்து தொழிலாளர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனால் வெளியூர் செல்லும் பேருந்துகள் தாமதமாக இயக்கப்பட்டன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com