ஊழியர்கள் யாரும் நாளை விடுப்பு எடுக்கக்கூடாது - சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

ஊழியர்கள் யாரும் நாளை விடுப்பு எடுக்கக்கூடாது - சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
ஊழியர்கள் யாரும் நாளை விடுப்பு எடுக்கக்கூடாது - சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

போக்குவரத்து ஊழியர்கள் நாளை விடுப்பு எடுக்கக்கூடாது என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னையில் திமுக சார்பில் நாளை பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணியில் பங்கேற்க கூட்டணிக் கட்சிகளுக்கும், மாணவர்களுக்கும், பல்வேறு அமைப்பினருக்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் நாளை விடுப்பு எடுக்கக்கூடாது என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

போக்குவரத்து ஊழியர்கள் கண்டிப்பாக நாளை பணிக்கு வர வேண்டுமென்றும், வழக்கமாக நாளை வார விடுமுறை உள்ளவர்கள் மற்றொரு நாள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் சார்பில் நாளை பேரணி நடைபெறவுள்ள நிலையில் யாருக்கும் விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com