தமிழ்நாடு
நாளை முதல் வேலைநிறுத்தம்... போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
நாளை முதல் வேலைநிறுத்தம்... போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் நாளை முதல் வேலை நிறுத்தம் தொடங்கும் என போக்குவரத்து தொழிற்சங்கள் அறிவித்துள்ளன.
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அகவிலைப்படி நிலுவைத் தொகை மற்றும் ஓய்வூதிய பலன்கனை வழங்க ஆயிரத்து 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய அமைச்சர் ஓப்புதல் அளித்தார். ஆனால் இந்த தொகை போதுமானது அல்ல என தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதனையடுத்த்து நாளை முதல் தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படமாட்டாது என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.