\
அரசுப் பேருந்துகளை திடீரென மறித்து ஆய்வு செய்த போக்குவரத்துத்துறை அமைச்சர்

அரசுப் பேருந்துகளை திடீரென மறித்து ஆய்வு செய்த போக்குவரத்துத்துறை அமைச்சர்

அரசுப் பேருந்துகளை திடீரென மறித்து ஆய்வு செய்த போக்குவரத்துத்துறை அமைச்சர்
Published on

கரூர் அருகே அரசு பேருந்துகளை திடீரென நிறுத்தி போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.

கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்றார். செல்லும் வழியில் கரைப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் நின்ற அவர், கரூர் - கோவை சாலையில் சென்ற அரசு பேருந்துகளை திடீரென நிறுத்தி ஆய்வு செய்தார்.

அத்துடன் கோவையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு குளிர்சாதன விரைவு பேருந்தையும் நிறுத்திய அமைச்சர், பேருந்தில் இருக்கும் வசதிகள் குறித்தும், குறைகள் ஏதேனும் இருக்கிறதா ? என்றும் பயணிகளிடம் கேட்டறிந்தார். அமைச்சர் நேரடியாக பேருந்தை நிறுத்தி குறைகளை கேட்டறிந்ததை, பேருந்தில் இருந்த பயணிகள் வெகுவாக பாராட்டினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com