‘ஓட்டு போட்டுட்டு பொங்கல் பரிசு வாங்கிக்கோங்க’ - அமைச்சர் பேச்சால் சர்ச்சை
உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்னர் பொதுமக்கள் பொங்கல் பரிசை வாங்கிக்கொள்ளலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையும், அதிமுக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்களுக்கும் ஆதரவாக வாக்கு சேகரித்து பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் ரூ.1000 வழங்க இருந்தபோது, திமுக நீதிமன்றம் சென்றதால் வழங்க முடியவில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், வழக்கமாக பொங்கல் பரிசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவீங்க, இப்போது ஓட்டு போட்டுவிட்டு பொங்கல் பரிசு வாங்கிக் கொள்ளுங்கள் என பேசினார். அவரது இந்தப் பேச்சு வாக்குக்கு பரிசு கொடுப்பதுபோல உள்ளதாக பலரும் கூறியதால் சர்ச்சை எழுந்தது.