திட்டமிட்டபடி போராட்டம்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு
அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
13வது ஊதிய ஒப்பந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் 15 ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தன. இதையடுத்து தொழிற் சங்கத்தினர், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் முன்னேற்றம் இல்லாததால் திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று சிஐடியு சவுந்தரராஜன் அறிவித்தார். அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது போராட்டம் நடத்துவதால் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காது. போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் சென்னை பல்லவன் இல்லத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருடன் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்தின. இது தோல்வியில் முடிந்ததால், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று அறிவித்துள்ளன.