\

+2 தேர்வு எழுதிய திருநங்கை..! (வீடியோ )

+2 தேர்வு எழுதிய திருநங்கை..! (வீடியோ )
Published on

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் ஒரு திருநங்கை தேர்வு எழுதியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தாரிகா பானு அம்பத்தூரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் மகளிர் பள்ளியில் முதல் குரூப்பில் படித்து வருகிறார். முதல் திருநங்கையாக மருத்துவம் படிக்க வேண்டும் மருத்துவ துறையில் சாதிக்க வேண்டும் என்பதே தமது கனவு என்று அவர் கூறுகிறார். விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர், திருநங்கையர்களை குடும்பத்தினர் புறக்கணிப்பதாலேயே அவர்கள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படுவதாக கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com