\
தகாத வார்த்தைகளால் திட்டுவதாக புகார்.. போலீசான திருநங்கை தற்கொலை முயற்சி..!

தகாத வார்த்தைகளால் திட்டுவதாக புகார்.. போலீசான திருநங்கை தற்கொலை முயற்சி..!

தகாத வார்த்தைகளால் திட்டுவதாக புகார்.. போலீசான திருநங்கை தற்கொலை முயற்சி..!
Published on

ராமநாதபுரம் ஆயுதப்படை காவலரான திருநங்கை நஸ்ரியா, சக காவலர்கள் மீது புகார் கூறி எலிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த நஸ்ரியா, கடந்த 2017-ஆம் ஆண்டு திருச்சியில் பயிற்சி முடித்து மதுரையில் பெண் காவலராக பணியில் சேர்ந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரையில் இருந்து ராமநாதபுரம் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட அவர், ஆயுதப்படை குடியிருப்பில் தங்கியுள்ளார். இந்நிலையில், பணியின்போது ஆய்வாளர், சிறப்பு சார்பு ஆய்வாளர், தலைமை எழுத்தர் ஆகியோர் தனது நடத்தை குறித்து தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறி எலிமருந்தை தண்ணீர் கலந்து குடித்து மயங்கி விழுந்தார். இந்த காட்சிகள் வாட்ஸ் அப்பில் பரவியது.

எலி மருந்தை குடித்த நஸ்ரியாவை, சக காவலர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே நஸ்ரியாவின் புகார் தொடர்பாக காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது மூன்று வாரங்களுக்கு மேலாக எவ்வித தகவலும் தெரிவிக்காமல் நஸ்ரியா விடுப்பு எடுத்ததாகவும், தவறாமல் பணிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது நடத்தை குறித்து யாரும் விமர்சிக்கவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com