\
தமிழகத்தில் 3 முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

தமிழகத்தில் 3 முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

தமிழகத்தில் 3 முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!
Published on

தமிழக உளவுத்துறை ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதமும், சென்னை காவல் ஆணையராக சங்கர் ஜிவாலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் நேற்றிரவு வெளியிட்ட உத்தரவின்படி, கோவை மாநகர காவல் ஆணையராக இருக்கும் டேவிட்சன் தேவாசீர்வாதம் உளவுத்துறை ஏடிஜிபியாகவும், சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலுக்கு பதிலாக ஐபிஎஸ் அதிகாரி சங்கர் ஜிவாலும் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருக்கும் ஜெயந்த் முரளி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பி.தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com