தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு..

தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்pt web

பல்வேறு ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 • சிபிசிஐடி ஏடிஜியாக ஐபிஎஸ் அதிகாரி அன்பிற்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு

 • தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அமலாக்க பணியகம் சிஐடி ஏடிஜிபியாக பணியிட மாற்றம்

 • தாம்பரம் காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டுள்ளார்.

 • சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையராக நரேந்திரன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்

 • சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்

 • சென்னை ஆயுதப்படை பிரிவு ஏ.டி.ஜி.பி. ஆக மகேஷ் குமார் அகர்வாலை நியமனம் செய்து அரசு உத்தரவு. கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார் மகேஷ் குமார் அகர்வால்.

18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
பட்டியலின தலைவர்கள் மீது ஏன் வன்முறை நிழல்?
 • சட்டம் ஒழுங்கு ஐ.ஜி. அஸ்ரா கர்க் வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

 • தென் மண்டல ஐஜியாக பிரேம் ஆனந்த் சின்ஹாவை நியமித்து தமிழக அரசு உத்தரவு

 • சேலம் மாநகர காவல் ஆணையராக பிரவீன் குமார் அபினபு நியமனம் செய்யப்பட்டுள்ளார்

 • சேலம் காவல் ஆணையர் விஜயகுமாரி ஆயுதப்படை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்

 • திருப்பூர் மாநகர காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்

 • திருப்பூர் மாநகர காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்

18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
டெல்லி: பிறந்தநாள் அன்று காதலி அழைத்ததாக சென்ற மாணவர் அடித்துக் கொலை... நடந்தது என்ன?
 • கடலோர காவல்படை குழுமம் ஏ.டி.ஜி.பி. ஆக சஞ்சய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

 • பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக ராஜீவ் குமார் நியமனம்

 • காவல் துறை தொழில்நுட்பப் பிரிவு ஏடிஜிபியாக தமிழ் சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்

 • சென்னை தலைமைக் காவலக கூடுதல் ஏடிஜிபியாக வினித் தேவ் வான்கடே நியமனம்

 • காவல் துறை நிர்வாகப்பிரிவு கூடுதல் ஏடிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்

 • மாநில குற்ற ஆவண காப்பகம் கூடுதல் ஏடிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com