தமிழ்நாடு
செங்கல்பட்டு - தாம்பரம் மின்சார ரயில் நிறுத்தம்
செங்கல்பட்டு - தாம்பரம் மின்சார ரயில் நிறுத்தம்
செங்கல்பட்டு - தாம்பரம் இடையே இன்று காலை முதல் மாலை வரை மின்சார இரயில் இயங்காது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
வண்டலூர் மற்றும் கூடுவாஞ்சேரி பகுதியில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சுரங்கப்பாதை பகுதியில் பொறியியல் பணிகள் இன்று நடைபெறுவதன் காரணமாக அப்பாதையில் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து காலை 8.25 மணி முதல் மாலை 6.40 மணி வரை நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவை இன்று சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்பட்டு, மீண்டும் தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரைக்கே திருப்பி அனுப்பப்பட உள்ளது.