train
trainpt desk

தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் தாமதம்... ரீஃபண்ட் செய்யப்படும் டிக்கெட் தொகை!

தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் 5 மணி நேரம் தாமதமானதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானர். இந்நிலையில் டிக்கெட் பணம் திருப்பித் தரப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Published on

திருச்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தண்டவாள சீரமைப்புப் பணியால், 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால், திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்குள் ஒவ்வொரு ரயிலாக அனுமதிக்கப்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் இயக்கப்படும் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Train
Trainpt desk

இதில் முக்கிய ரயில்களான பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட அதிவிரைவு ரயில்கள் 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், ரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்தும் ரயிலில் பயணம் மேற்கொள்ள முடியாமல் போன பயணிகளுக்கு ரிசர்வேசன் செய்த பணம் திருப்பித் தரப்படும் என்றும், முன்பதிவு செய்யாத பயணிகள் ரயில்நிலைய அதிகாரியிடம் காலதாமத சான்று பெற்று பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com