பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி: செங்கோட்டையன்

பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி: செங்கோட்டையன்

பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி: செங்கோட்டையன்
Published on

அமெரிக்காவில் உள்ள பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை எப்படி நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை காளப்பட்டியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா நடைப்பெற்றது. விழாவில் பங்கேற்ற அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் ஓவியங்களை   பார்வையிட்டனர். இந்த விழாவில் பேசிய போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர்,  நீட் தேர்வில் மாணவர்கள் அதிகளவு கலந்து கொள்ள கல்வித்துறை அமைச்சர்  நடவடிக்கை எடுத்துள்ளார் எனவும் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மாணவர்களுக்கு  மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இதனைதொடந்து பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழகத்தில் பல போராட்டங்கள் நடந்தாலும் அவற்றை சாதுர்யமாக எதிர்கொண்டு இந்த ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது எனவும் கோவை மாவட்டத்திற்கு தேவையான மெட்ரோ ரயில், மேம்பாலம், மேற்கு புறவழிச்சாலை என தேவையான அனைத்தையும் இந்த அரசு வழங்கி வருகிறது என்றார். 

இறுதியாகப் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளியின் நூற்றாண்டை முன்னிட்டு இந்தப் பள்ளிக்கு கலையரங்கம், புதிய கட்டடங்கள் கட்டப்படும் எனவும், நீட் தேர்விற்காக 3 ஆயிரத்து 118  மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், அதில் குறைந்தது 1500 மாணவர்கள் தமிழகத்தில் இருந்து  மருத்துவக்கல்லூரிக்கு செல்வார்கள் என தெரிவித்தவர், அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் படிப்படியாக மாற்றப்பட்டு, சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை விட சிறப்பான பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்றும், 2 ஆண்டு காலத்திற்குள் அனைத்து பாடத்திட்டங்களும் மாற்றப்பட இருப்பதாக தெரிவித்தார். 

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், 8ம் வகுப்பு அறிவியல் பாடத்திட்டத்தில் பாலியல் வன்முறையை தடுக்கும் வழிமுறைகளில்  பெண்களின் உடை குறித்து இருக்கும் கருத்துகள் வரும் காலங்களில் மாற்றப்படும் என கூறிய அவர், 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்காத  தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு  எதிர்காலத்தில் வாய்ப்பு ஏற்படுத்துவது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும், ஆசிரியர்கள் அந்தந்த பகுதியில் உள்ள மாணவர்களை  பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற நோக்கிலே 2015லிருந்து மேல்நிலைப் பள்ளிகள் மூடுவது குறித்த சுற்றறிக்கை வெளியிடப்படுவதாகவும், பள்ளிகளை மூடுவதும், திறப்பதும் அரசால்தான் முடியுமே தவிர மற்றவர்களால் அல்ல என்றும் உறுதியளித்தார். மேலும் அமெரிக்காவில் உள்ள பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை எப்படி நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com