மலைப்பாதையில் பேருந்து இயக்க நண்பருக்கு பயிற்சி: தற்காலிக ஓட்டுநர் விபரித செயல்

மலைப்பாதையில் பேருந்து இயக்க நண்பருக்கு பயிற்சி: தற்காலிக ஓட்டுநர் விபரித செயல்
மலைப்பாதையில் பேருந்து இயக்க நண்பருக்கு பயிற்சி: தற்காலிக ஓட்டுநர் விபரித செயல்

பேருந்தை இயக்கிய தற்காலிக ஓட்டுனர் ஒருவர், மலைப்பாதையில் தனது நண்பரிடம் பேருந்தை கொடுத்து ஓட்ட செய்த சம்‌பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொண்டை ஊசி வளைவுகள் உள்ள உதகையில் அனுபவமுள்ள ஓட்டுனர்கள் இயக்குவதே சிரமமான காரியம். ஆனால், உதகையில் இருந்து கிளன்மார்கன் என்ற கிராமத்திற்கு சென்ற அரசு பேருந்தை ஒரு தற்காலிக ஓட்டுனர் இயக்கியிருக்கிறார். பாதி வழியில்,  தன்னுடன் பயணித்த நண்பருக்கு பேருந்தை இயக்க கற்று கொடுத்திருக்கிறார். உதகை போன்ற ஆபத்தான வளைவுகள் நிறைந்த பகுதியில் பேருந்தை இயக்கத் தெரியாத ஒருவரிடம் பேருந்தை இயக்கக் கொடுத்தது கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதை அந்த பேருந்தில் பயணித்த ஒருவர் செல்போனில் படம் பிடித்து வெளியிட்டிருக்கிறார். இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com