தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா..? இன்று டிக்கெட் புக் பண்ணலாம்..!

தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா..? இன்று டிக்கெட் புக் பண்ணலாம்..!

தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா..? இன்று டிக்கெட் புக் பண்ணலாம்..!
Published on

தீபாவளி பண்டிகையையொட்டி ரயில் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு இன்று தொடங்க உள்ளது.

தீபாவளி பண்டிகையின்போது தங்கள் சொந்த ஊர்களுக்கு ஆயிரக்கணக்கானோர் படையெடுப்பது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 6-ம் தேதி அதாவது செவ்வாய்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே நவம்பர் 3-ம் தேதி சனிக்கிழமை வருகிறது.  அலுவலகங்களில் வேலை பார்க்கும் பலருக்கும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமாக இருக்கும். எனவே அவர்கள் வெள்ளிக்கிழமையே தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு கிளம்புவார்கள்.

இதன்படி நவம்பர் 2-ம் தேதி தொலைதூர ரயில் பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் அதன்கான முன்பதிவை இன்று காலை 8 மணிமுதல் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2-ம் தேதியின் பயணத்துக்கு இன்னும் 120 நாட்கள் உள்ள நிலையில், அதற்கான முன்பதிவு இன்று தொடங்க உள்ளது. இதனையொட்டி தீபாவளிக்கு ரயிலில் பயணம் மேற்கொள்ள நினைத்தால் இன்றே புக் செய்து டிக்கெட்டை பயணிகள் உறுதி செய்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com