\
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவை ரத்து

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவை ரத்து

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவை ரத்து
Published on

தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக சென்னையில் நேற்று இரவிலிருந்து விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னையின் பல்வேறு சாலைகளில் நீர் குளம்போல தேங்கி நிற்கிறது. பொதுமக்கள் வாகன ஓட்டிகளின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்நிலையில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

இதன்காரணமாக தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மழைநீர் அகற்றும் பணிகள் நிறைவடைந்ததும் மீண்டும் மின்சார ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com