\
சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் சேவை தொடங்கியது..!

சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் சேவை தொடங்கியது..!

சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் சேவை தொடங்கியது..!
Published on

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, இன்று காலை முதல் ரயில் சேவை இயக்கம் தொடங்கியுள்ளது.

காலை 6.10 மணி அளவில் கோவையை நோக்கி முதல் ரயில் இயங்கத் தொடங்கியது. முன்பதிவு செய்துள்ள பயணிகள் மட்டுமே ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

ரயில் நிலையங்களில் டிக்கெட்டுகள் கொடுக்கப்படுவதில்லை. முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கான பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

வரக்கூடிய பயணிகளின் உடல் வெப்ப சோதனைக்காக 90 நிமிடங்கள் முன்னதாக வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 6ம் எண் வாயில் வழியாக மட்டுமே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். நடைமேடை எண் 10 மற்றும் 11 ஆகியவற்றில் இருந்து ரயில் இயக்கப்படுகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com