\
முழு ஊரடங்கு எதிரொலி: வாடகை வாகனங்களுக்காக காத்திருக்கும் ரயில் பயணிகள்

முழு ஊரடங்கு எதிரொலி: வாடகை வாகனங்களுக்காக காத்திருக்கும் ரயில் பயணிகள்

முழு ஊரடங்கு எதிரொலி: வாடகை வாகனங்களுக்காக காத்திருக்கும் ரயில் பயணிகள்
Published on

ஞாயிறு முழு முடக்கத்தால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வாடகை வாகனங்களுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் திண்டாட்டத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

தேவையற்ற பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், ரயில் நிலையங்களில் பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ரயிலில் வந்து இறங்குவோர் வாடகை வாகனங்களுக்கு பதிவு செய்துவிட்டு நீண்டநேரம் காத்துக் கிடக்கின்றனர். காவல்துறையினரின் கட்டுப்பாடுகளை கடந்து வாடகை வாகனங்கள் வரவேண்டியிருப்பதால் நேரம் ஆவதாக கூறப்படுகிறது.

ரயில் பயணச்சீட்டு வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் அனுமதிக்கப்படுகின்றனர். முழு முடக்கத்தால் வாடகை வாகனங்களின் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com