அதிவேகத்தில் இயக்கியதாலேயே சென்னையில் மின்சார ரயில் விபத்து .. விசாரணையில் வெளிவந்த உண்மை

அதிவேகத்தில் இயக்கியதாலேயே சென்னையில் மின்சார ரயில் விபத்து .. விசாரணையில் வெளிவந்த உண்மை
அதிவேகத்தில் இயக்கியதாலேயே சென்னையில் மின்சார ரயில் விபத்து .. விசாரணையில் வெளிவந்த உண்மை

15 கி.மீ. வேகத்தில் இயக்காமல் 30 கி.மீ. வேகத்தில் இயக்கியதால் மின்சார ரயில் விபத்து நடந்ததாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், கடந்த 24-ம் தேதி பணிமனையில் இருந்து எடுத்துவரப்பட்ட மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக எழும்பூர் ரயில்வே காவல்துறை ரயில் ஓட்டுநர் (லோகோ பைலட்) பவித்ரன் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 279-ன் கீழ் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் இயக்குதல் மற்றும் ரயில்வே சட்டப்பிரிவுகளான 151-ன் கீழ் ரயில்வே சொத்தை சேதப்படுத்துதல், 154-ன் கீழ் ரயில் பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அலட்சியமான செயலில் ஈடுபடுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு அதிகாரி பிரேம்குமார் தலைமையில் 5 பேர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மெக்கானிக்கல், சிக்னல் ஆப்ரேட்டிங் மற்றும் எலக்ட்ரிகல் துறை அதிகாரிகள் இந்த குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

இந்த குழு விசாரணை நடத்தி அறிக்கையை சென்னை கோட்ட ரயில்வே துறை அதிகாரிகளிடம் சம்ர்ப்பித்துள்ளனர். "மின்சார ரயில் சுமார் 15 கி.மீ. வேகத்தில் தான் ரயில் நிலையத்தின் நடைமேடைக்குள் வர வேண்டும். ஆனால், விபத்து நடந்து அன்று ரயில் ஓட்டுனர் 30 கி.மீ. வேகத்தில் வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் அதனை அறிக்கையாக சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில், ரயில்வே ஓட்டுநர் பவித்ரனை பணியிடை நீக்கம் செய்து சென்னை கோட்ட ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com