TRAI
TRAIpt desk

இந்தியாவில் 120 கோடி பேர் தொலைத் தொடர்பு சந்தாதாரர்களாக உள்ளனர் - TRAI தகவல்

இந்தியாவில் 120 கோடி பேர் தொலைத் தொடர்பு சந்தாதாரர்களாக இருப்பதாக இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI தெரிவித்துள்ளது.
Published on

தொலைத் தொடர்பு சேவை வழங்கி வரும் நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் உள்ளதாக இந்திய தொலைத் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.

சென்ற ஏப்ரல் மாதத்தில் வயர்லெஸ் பிரிவில் 26,80,000 புதிய வாடிக்கையாளர்கள் இணைந்த நிலையில், 47,24,000 பேர்களுடன் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் உள்ள பார்தி ஏர்டெலில் சென்ற ஏப்ரல் மாதம் 7 லட்சத்து 52 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர்.

cell phone
cell phone pt desk

இதன் மூலம் அந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 26 கோடியே 75 லட்சமாக அதிகரித்துள்ளது. அதே நேரம், பொதுத் துறையைச் சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து 12 லட்சத்து 30 ஆயிரம் வாடிக்கையாளர்கள் வெளியேறியுள்ளதாகவும் ட்ராய் கூறியுள்ளது. வயர்லெஸ் பிரிவில் வோடோஃபோன் ஐடியா நிறுவனத்தில் இருந்து 7 லட்சத்து 35 ஆயிரம் பேர் வெளியேறியிருப்பதும் தெரியவந்துள்ளது.

TRAI
சமூக ஆர்வலருக்கு தொலைபேசி மூலம் வந்த அழைப்பு.. புதையல் தங்கம் விற்பதாக புதுவித மோசடி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com