நான்குவழிச் சாலையில் எதிர் திசையில் பைக்கில் சென்ற இரு சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

நான்குவழிச் சாலையில் எதிர் திசையில் பைக்கில் சென்ற இரு சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
நான்குவழிச் சாலையில் எதிர் திசையில் பைக்கில் சென்ற இரு சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

நான்குவழிச் சாலையில் எதிர் திசையில் வந்த பைக் மீது லாரி மோதிய விபத்தில் 2 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நெல்லை மாவட்டம் கூட்டப்புளி கடற்கரை கிராமம் சுனாமி நகரைச் சேர்ந்த ஆரோக்கியம் என்பவரின் மகன் ஆல்சன் (16), தினேஷ் என்பவரின் மகன் பிரமோத் (16), மற்றும் சாமி என்பவரின் மகன் ஆஸ்வின் பிரகாசம் (17), ஆகிய மூவரும் ஒரே பைக்கில் வள்ளியூர் சென்றனர்.

இந்நிலையில், வள்ளியூரில் தங்களது பணிகளை முடித்து விட்டு கூட்டப்புளிக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது பணகுடி அருகிலுள்ள புண்ணியவாளபுரம் நான்குவழிச் சாலையில் எதிர் திசையில் வந்துள்ளனர். அப்போது தூத்துக்குடி நோக்கிச் சென்ற டிப்பர் லாரி மீது பைக் பலமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், ஆல்சன் மற்றும் பிரமோத் ஆகிய இரு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்து உயிருக்கு போராடிய ஆஸ்வின் பிரகாசத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பணகுடி போலீசார், இருவரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பினனர் லாரி ஓட்டுநர் ரமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com