\
கரூரில் விளையாடச் சென்ற 7வயது சிறுவனுக்கு நேர்ந்த சோக முடிவு

கரூரில் விளையாடச் சென்ற 7வயது சிறுவனுக்கு நேர்ந்த சோக முடிவு

கரூரில் விளையாடச் சென்ற 7வயது சிறுவனுக்கு நேர்ந்த சோக முடிவு
Published on

கரூரில் காணாமல் போன 7 வயது நிறுவன் விவசாய கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

கரூர் பசுபதிபாளையம் ஏவிபி நகரை சேர்ந்த கூலித் தொழிலாளி பாலசுப்பிரமணி. இவரது 7வயது மகன் தர்ஷன் கடந்த 4ஆம் தேதி விளையாடச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த பசுபதிபாளையம் காவல்நிலைய போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று பசுபதிபாளையம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் தர்ஷன் சடலமாக கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில், பசுபதிபாளையம் காவல்நிலைய போலீசார், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து தொடர்ந்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

காணாமல் போன 7வயது சிறுவன் விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது. பசுபதிபாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com