ஆந்திரா|கவிழ்ந்த பேருந்து; பரிதாபமாக உயிரிழந்த 4 பேர்!
தனியார் பேருந்தில் திருப்பதி கோயிலில் வழிபாடு செய்துவிட்டு வீடு திரும்பும்போதுதான் இந்த பயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருச்சியை சேர்ந்த 40 பேர் கொண்ட குழு, திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு , சித்தூர் – வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தில் வந்துள்ளனர் .
அப்போது, ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து சாலைமீது நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியுள்ளது. இதனால், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. காயமடைந்த 22 பேர் திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுத்தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.