திருவாரூர்: இருசக்கர வாகனத்தில் கோயில் திருவிழாவுக்குச் சென்ற இரு இளைஞர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

மன்னார்குடி அருகே இருசக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் இளைஞர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tragedy
Tragedypt desk

செய்தியாளர்: சி.விஜயகுமார்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கருணாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ். இவரும் இவரின் நண்பர் பிரசாந்த் என்பவரும், நேற்றிரவு பச்சகுளம் கிராமத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவை காண்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். வாகனத்தை மனோஜ் ஓட்டிச் சென்று நிலையில், பச்சகுளம் கிராமம் அருகே சென்றபோது சாலையோரம் இருந்த மரத்தின் மீது அது மோதி விபத்துக்குள்ளானது.

Death
DeathFile Photo

இதில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த பிரசாந்த் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற மனோஜ் காயங்களுடன் மீட்கப்பட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து தேவங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tragedy
கும்மிடிப்பூண்டி|வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com