சேலம்: மின்சாரம் பாய்ந்து சித்திரக் கலைஞர் பசுபதிநாதன் உயிரிழப்பு

சேலம்: மின்சாரம் பாய்ந்து சித்திரக் கலைஞர் பசுபதிநாதன் உயிரிழப்பு

சேலம்: மின்சாரம் பாய்ந்து சித்திரக் கலைஞர் பசுபதிநாதன் உயிரிழப்பு
Published on

சேலத்தைச் சேர்ந்த பிரபல சித்திரக் கலைஞர் பசுபதிநாதன் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடங்களில் உள்ள சுவர்களை பொன்மொழிகளால் அலங்கரிப்பதை கடந்த 25 ஆண்டு கால சேவையாக செய்து வந்தவர் சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த பிரபல சுவர் சித்திரக் கலைஞர் பசுபதிநாதன். இவர், சேலம் மாநகரில் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள சுவர்களில் பல்வேறு வாழ்வியல் தத்துவங்களை வாரம் தோறும் எழுதி பொதுமக்களுக்கு தன்னம்பிக்கையூட்டி வந்தவர்.

தற்கொலை செய்து கொள்ள ஒரு நொடி துணிச்சல் போதும்; தன்னம்பிக்கையோடு வாழ ஒவ்வொரு நொடியும் துணிச்சல் வேண்டும் என்பன போன்ற பல்லாயிரக்கணக்கான பொன்மொழிகளை தனது சுவர் சித்திரம் மூலம் பொதுமக்களிடையே கொண்டு சேர்த்த பசுபதிநாதன் பிரபல திரைப்பட இயக்குனர் சசிகுமார் (பூ, பிச்சைக்காரன் பட இயக்குனர்) உள்ளிட்ட பலரது வாழ்வியல் மாற்றங்களுக்கும் விதையாக இருந்துள்ளார்.

பிரதிபலன் பாராமல் எம்எம்எம் கார்னர் என்ற பெயரில் பொன்மொழிகளை எழுதி பல்லாயிரக் கணக்கானவர்கள் மனதில் முகம் தெரியாமல் முத்திரை பதித்த பசுபதிநாதன் எதிர்பாராத விதமாக அவரது வீட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். பசுபதிநாதன் உயிரிழந்த தகவல் அறிந்த சேலம் மாநகர மக்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகி உள்ளனர். வாரம் தோறும் புதுப்புது பொன்மொழிகளால் 25 ஆண்டுகாலம் தொடர்ந்த வாசகங்களுக்கு, பசுபதிநாதனின் உயிரிழப்பு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com