\
மனைவி உயிரிழந்த சோகம் - ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கணவன்

மனைவி உயிரிழந்த சோகம் - ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கணவன்

மனைவி உயிரிழந்த சோகம் - ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கணவன்
Published on

ஆம்பூர் அருகே மனைவி இறந்த சோகத்தில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை  கொண்ட சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாச்சியார்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் . இவரது மனைவி சசிகலா. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட இவர்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தனர்.  இந்நிலையில் கடந்த  6 தேதி குடும்ப தகராறு காரணமாக சசிகலா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து  மனைவி உயிரிழந்த சோகத்தில் இருந்த அவரது கணவர் ராஜேஷ் பெங்களூரிவிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார்  ராஜேஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com