மாநகர பேருந்தின் படியில் தொங்கியவாறு பயணம் செய்த கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்

மாநகர பேருந்தின் படியில் தொங்கியவாறு பயணம் செய்த கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்
மாநகர பேருந்தின் படியில் தொங்கியவாறு பயணம் செய்த கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்

மாநகர பேருந்தின் படியில் தொங்கியவாறு பயணம் செய்த கல்லூரி மாணவர் கீழே விழுந்து பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் கொளப்பாக்கம் சாலையில் தடம் எண் 515 மாநகர பேருந்து தாம்பரத்தில் இருந்து திருப்போரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் சஞ்சய் (18), என்பவர் பேருந்தின் படியில் தொங்கியவாறு பயணம் செய்துள்ளார்.

இந்நிலையில், படிகட்டில் இருந்து தவறி கீழே விழுந்த மாணவன் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பேருந்து ஓட்டுநர் பெருமாளிடம் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com