சாலை விபத்தில் தம்பதியருக்கு நேர்ந்த பரிதாபம்: வெளியான பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

சாலை விபத்தில் தம்பதியருக்கு நேர்ந்த பரிதாபம்: வெளியான பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

சாலை விபத்தில் தம்பதியருக்கு நேர்ந்த பரிதாபம்: வெளியான பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள்
Published on

சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் தம்பதியர் உயிரிழந்தனர். பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீப்பாலக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் தசரதன் (65) அமுதா (58) தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வெட்டிக்காடு, காஞ்சிமடத்துறை ஆகிய பகுதியில் உள்ள தோப்புகளை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தசரதன் இன்று தனது மனைவியுடன் வெட்டுக்காடு பகுதியிலிருந்து லோயர்கேம்ப் மலையாள பகவதி அம்மன் கோவில் முன் சாலையை கடக்க முயன்றார். அப்போது குமுளியிலிருந்து கம்பம் நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில், தசரதன் சம்பவ இடத்தில் பலியானார். அவரது மனைவி அமுதா பலத்த காயத்துடன் மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த தசரதனின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குமுளி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து குறித்து சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com