தமிழ்நாடு
சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா: நாளை போக்குவரத்து மாற்றம்
சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா: நாளை போக்குவரத்து மாற்றம்
சுதந்திர தின விழா சென்னை கோட்டையில் நடைபெறுவதை முன்னிட்டு 15-ஆம் தேதி காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்படவுள்ளது.
அதன்படி, உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை வடக்கு பகுதி வரை அமையப் பெற்றுள்ள இராஜாஜி சாலை, மற்றும் கொடிமரச் சாலை ஆகிய சாலைகளில் வாகன அனுமதி அட்டை பெற்றிருப்போர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும், பிற வாகனங்கள் அனைத்தும் மாற்று சாலைகளை பயன்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் தங்களது ஒத்துழைப்பை நல்குமாறு சென்னை போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.