பிரதமர் மோடி வருகை
பிரதமர் மோடி வருகைமுகநூல்

பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை | சென்னையில் போக்குவரத்து மாற்றம்

பிரதமர் வருகையையொட்டி சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சாலைகளில் வணிக வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெறும் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானம் அருகே உள்ள அண்ணாசாலை, எஸ்.வி.படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, சிபெட் சந்திப்பு மற்றும் 100 அடி சாலை ஆகியவற்றில் நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை சிறிதளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், எனவே வாகன ஓட்டிகள் மாற்று வழியில் செல்ல வேண்டும் என்றும் போக்குவரத்து காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இதேபோல் இன்று நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை மத்திய கைலாஷ் முதல் - ஹால்டா சந்திப்பு வரையும், பல்லாவரம் இந்திரா காந்தி சாலை முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை வணிக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வருகை
ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக தமிழகம் வரும் பிரதமர்... பிளான் என்ன?

ராமாபுரம் - மவுண்ட் பூந்தமல்லி சாலை முதல் கத்திப்பாரா சந்திப்பு வரையும், அசோக் பில்லர் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரையும் வணிக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

விஜயநகர் சந்திப்பு முதல் கான்கார்ட் சந்திப்பு வரைக்கும், அண்ணா சிலை முதல் - மவுண்ட் சாலை வரையும், தேனாம்பேட்டை நந்தனம் காந்தி மண்டபம் சாலையிலும் வணிக வாகனங்கள் செல்ல முடியாது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com