மெட்ரோ பணி காரணமாக அயனாவரம் பகுதியில் அக்.19 முதல் போக்குவரத்து மாற்றம்: முழு விவரம்

மெட்ரோ பணி காரணமாக அயனாவரம் பகுதியில் அக்.19 முதல் போக்குவரத்து மாற்றம்: முழு விவரம்
மெட்ரோ பணி காரணமாக அயனாவரம் பகுதியில் அக்.19 முதல் போக்குவரத்து மாற்றம்: முழு விவரம்
மெட்ரோ ரயில் பணி காரணமாக அயனாவரம் பகுதியில் நாளை மறுநாள் முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. 
சென்னை அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் அயனாவரம் வட்டார போக்குவரத்த அலுவலகம் முதல் ஆண்டர்சன் தெரு வரை மெட்ரோ ரயில் நிலையம் கட்டுமான அலுவல் துவக்கப்பட உள்ளது. இதனால் 19.10.2021 நாளை மறுநாள் செவ்வாய்கிழமை அன்று முதல் ஆண்டர்சன் சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட உள்ளது. 19.10.2021 அன்று முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.
* ஆண்டர்சன் சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சந்திப்பு முதல் கான்ஸ்டிபள் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.
* பில்கிங்டன் சாலையில் கொன்னூர் நெடுஞ்சாலை முதல் கான்ஸ்டிபள் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.
* ஆண்டர்சன் சாலையில் அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து வழக்கம் போல் பெரம்பூர் நோக்கி செல்லலாம்.
* ஆண்டர்சன் சாலையில் கான்ஸ்டிபள் சாலை சந்திப்பிலிருந்து அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்ல இயலாது.
* மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் கான்ஸ்டிபள் சாலை மற்றும் பில்கிங்கடன் சாலை சந்திப்பிலிருந்து, பில்கிங்டன் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.
* கனரக வாகனங்கள், கான்ஸ்டிபள் சாலை மற்றும் பில்கிங்டன் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி கான்ஸ்டிபள் சாலை (ரயில்வே மருத்துவமனை), போர்ச்சுகீஸ் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.
* கொன்னூர் நெடுஞ்சாலையிலிருந்து பில்கிங்டன் சாலை வழியாக பெரம்பூர் நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள், கொன்னூர் நெடுஞ்சாலையில் நேராக சென்று இடது புறமாக திரும்பி ஆண்டர்சன் சாலை மற்றும் கான்ஸ்டிபள் சாலை வழியாக செல்லலாம்.
இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்கும்படி சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com