சாலை விதிமீறல்களில் ஈடுபடும் ஃபுட் டெலிவரி ஊழியர்கள் மீது நடவடிக்கை..!

சாலை விதிமீறல்களில் ஈடுபடும் ஃபுட் டெலிவரி ஊழியர்கள் மீது நடவடிக்கை..!

சாலை விதிமீறல்களில் ஈடுபடும் ஃபுட் டெலிவரி ஊழியர்கள் மீது நடவடிக்கை..!
Published on

போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க உணவு விநியோகிக்கும் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

சென்னை மாநகரில் கைபேசி செயலி வழியாக உணவு விநியோகிக்கும் நிறுவனங்களில் பணிபுரிவோர் இருசக்கர வாகனங்களில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்கள் உணவுப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விரைவாக கொண்டு சேர்ப்பதற்காக, அவ்வப்போது போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டு வருவதை தடுக்க, சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வந்தன. அந்த நடவடிக்கையால் இதுவரை 2051 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில் உணவு விநியோகிக்கும் நிறுவனங்களின் மேலாளர்களுடன், சென்னை போக்குவரத்து காவல்துறை‌ அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இந்தக் கூட்டத்தில் உணவு விநியோகிக்கும் தனியார் நிறுவனங்களின் மேலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது அந்தந்த நிறுவனங்கள் தரப்பிலிருந்து தங்களது ஊழியர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் தக்க அறிவுரைகள் வழங்கப்படும் எனவும் கள ஆய்வு செய்து இவ்வாறான போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் தங்களது ஊழியர்கள் மீது சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் தரப்பிலிருந்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

இதனைதொடர்ந்து போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் செயலி வழி உணவு விநியோகிக்கும் நிறுவனங்களின் மேலாளர்கள் அடங்கிய வாட்ஸ்அப் குழு ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும் அதில் விதிமீறலில் ஈடுபடும் ஊழியர்களின் புகைப்படங்களை காவல்துறை அதிகாரிகள் பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொண்டு, அதன் விவரம் இந்த வாட்ஸ்அப் குழுவில் பகிரப்படும் எனவும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த நிறுவனங்களின் ஊழியர்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து நடக்கும் வரையில் இந்த நடவடிக்கை தொடரும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com