சென்னையில் டிராபிக் போலீஸாகவுள்ள ரோபோ !

சென்னையில் டிராபிக் போலீஸாகவுள்ள ரோபோ !
சென்னையில் டிராபிக் போலீஸாகவுள்ள ரோபோ !

இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் டிராபிக் போலீசாக ரோபோ வலம் வர உள்ளது.

சென்னையின் மிக முக்கிய பிரச்னைகளில் ஒன்று டிராபிக். பல்வேறு இடங்களில் சிக்னல் வசதி இருந்தும் வாகன ஓட்டிகள் அதனை சரியாக மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு ஒரு புறம் நிலவுகிறது. மறுபுறம் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர்செய்ய அனைத்து சிக்னல்களிலும் இல்லாமல் இருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இது நடைபயண வாசிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் டிராபிக் போலீசாக ரோபோ விரைவில் வலம் வர உள்ளது. மாணவர்கள் சாலையை கடக்க உதவுவது, வாகனங்களை சீர்படுத்தும் பணியில் இந்த ரோபோ ஈடுபட உள்ளது.

இதனிடையே சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு காட்சிக் கூடத்தை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் துவக்கி வைத்தார். இதில் குழந்தைகளை கவரும் விதமாகவும், அவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகளை புரியும் விதமாக எடுத்துக் கூறும் வகையிலும் ரோபோ இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com