ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகளை நிறுத்த வசதியில்லை... பெங்களூரு நெடுஞ்சாலையில் வாகன நெரிசல்!

ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகளை நிறுத்த வசதியில்லை... பெங்களூரு நெடுஞ்சாலையில் வாகன நெரிசல்!
ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகளை நிறுத்த வசதியில்லை... பெங்களூரு நெடுஞ்சாலையில் வாகன நெரிசல்!

சென்னை - பூவிருந்தவல்லியில் இருந்து புறப்படும் ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகளை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால், பெங்களூரு நெடுஞ்சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையிலிருந்து தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் ஆந்திரா, கர்நாடகாவுக்கும் செல்ல பூவிருந்தவல்லியிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பூவிருந்தவல்லியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே, பணிமனையின் அருகே அணுகு சாலையில் இருந்து சிறப்பு பேருந்துகள் புறப்படுகின்றன.

இடப்பற்றாக்குறை காரணமாக, அணுகுசாலையிலே நிறுத்தப்படுகின்றன. வழக்கமாகவே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இப்பகுதியில், தற்போது சாலை விரிவாக்கப் பணிகளும் நடக்கின்றன. இதனால் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு நெடுஞ்சாலையில் அணிவகுக்கும் வாகனங்கள், நத்தை போல ஊர்ந்தபடியே நகர்கின்றன. மேலும், சிறப்புப் பேருந்துகளை இயக்கும் பை பாஸ் பகுதியில் நிழற்குடையோ கழிவறை வசதியோ செய்யப்படாததால் குடும்பத்துடன் புறப்படும் பயணிகள் தவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com