\
"மழை பாதிப்புகளை சமாளிக்க உடனே நிதி வழங்கிடுக" - திமுக எம்.பி.,டி.ஆர் பாலு கோரிக்கை

"மழை பாதிப்புகளை சமாளிக்க உடனே நிதி வழங்கிடுக" - திமுக எம்.பி.,டி.ஆர் பாலு கோரிக்கை

"மழை பாதிப்புகளை சமாளிக்க உடனே நிதி வழங்கிடுக" - திமுக எம்.பி.,டி.ஆர் பாலு கோரிக்கை
Published on: 

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்க மத்திய அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டும் என்று திமுக எம்பி டி.ஆர்.பாலு கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னையை அடுத்துள்ள அயப்பாக்கம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் டி.ஆர்.பாலு ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், போர்வை உள்ளிட்டவற்றை அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக டி.ஆர்.பாலு தெரிவித்தார். பாதிப்புகளை சீரமைக்க மத்திய அரசு உடனே நிதியுதவி வழங்கிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com