குற்றாலத்தில் குவியும் கூட்டம் - வரிசையில் நின்று குளிக்கும் சுற்றுலாப் பயணிகள்

குற்றாலத்தில் குவியும் கூட்டம் - வரிசையில் நின்று குளிக்கும் சுற்றுலாப் பயணிகள்

குற்றாலத்தில் குவியும் கூட்டம் - வரிசையில் நின்று குளிக்கும் சுற்றுலாப் பயணிகள்
Published on

விடுமுறையில் குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். அதிகமான கூட்டம் குவிந்ததால் குறைவாக விழுந்த தண்ணீரில் குளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்துச் சென்றனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து இருந்ததால் குற்றாலத்திற்கு கடந்த சில தினஙகளாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இன்று விடுமுறை தினம் என்பதால் வழக்கத்திற்கு மாறான கூட்டம் அனைத்து அருவிகளிலும் இருந்த நிலையில் கடந்த இரு தினஙகளாக இருக்கும் வெயிலின் காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து குறைந்தே காணப்பட்டதைத் தொடர்ந்து. அனைத்து அருவிகளிலும் வரிசையில் நின்று குளிக்க போலீசார் ஏற்பாடு செய்தனர்.

ஐந்தருவி பகுதியில் அதிகமான கூட்டம் காரணமாக அருவியில் இருந்து சுமார் 500 மீட்டர் வரை வரிசையில் ஆண்களும் பெண்களும் நின்று குளித்து சென்றனர். குற்றாலத்தில் காவல்துறையினர் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புமுறைகளை சிறப்பாக அமைத்திருந்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்வுடன் குளித்துச் சென்றனர். புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக அனைத்து அருவிகளிலும் அதிகமான ஆண் பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com