கடல் சீற்றம் காரணமாக ராமேஸ்வரம் அக்னிதீர்தக்கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன்காரணமாக ராமேஸ்வரத்தில் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காலை 8 மணி முதல் ராமேஸ்வரம் அக்னிதீர்தக் கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி விடுமுறை காலம் என்பதால் ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர். சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் தனுஷ்கோடி பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் -தனுஷ்கோடி நெடுஞ்சாலையில் சுமார் 5 கிலோமீட்டருக்கு முன்னாள் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.