தொடர் விடுமுறையால் ராமேஸ்வரத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
தீபாவளி பண்டிகையை ஓட்டி தமிழகத்தின் கடைக்கோடி எல்லையான ராமேஸ்வரத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.
இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருவதோடு தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றுலாத்தலங்களில் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் கடைக்கோடி எல்லையான ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கமாக உள்ளது. தனுஷ்கோடி, அரிச்சல் பகுதிகளில் இன்று சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
ஆனால் இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.