\
குற்றால அருவிகளில் குளிக்க 2-ஆவது நாளாக தடை நீடிப்பு 

குற்றால அருவிகளில் குளிக்க 2-ஆவது நாளாக தடை நீடிப்பு 

குற்றால அருவிகளில் குளிக்க 2-ஆவது நாளாக தடை நீடிப்பு 
Published on

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க இரண்டாவது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று முதலே கனமழை பெய்து வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதன்காரணமாக, குற்றாலம் ஐந்தருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விடிய விடிய மழை பெய்துள்ளதால் இரண்டாவது நாளாக குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com