\
மனதுக்கு இதமான தேக்கடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மனதுக்கு இதமான தேக்கடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மனதுக்கு இதமான தேக்கடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on

முல்லைப் பெரியாறு அணை நீர் நிரம்பியிருக்கும் தேக்கடி ஏரியில் வார விடுமுறையால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான தேக்கடியில், தென்மேற்கு பருவமழை ஓய்ந்துள்ளது. இதனால் அதிக
வெயிலும் இல்லாமல் மழையும் இல்லாமல் இதமான காலநிலை நிலவுகிறது. அதனால் வார விடுமுறையான நேற்று தேக்கடிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.

ஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களாக பெய்த கன மழையால் முல்லைப்பெரியாறு அணை நீர் தேங்கியிருக்கும் தேக்கடி
ஏரி நீர் நிரம்பி இருக்கிறது. நீர் நிரம்பிய ஏரி, கரைகளில் அடர்ந்த வனம் ஆகியன இணைந்த இயற்கை எழிலை காண்பதற்காக சுற்றுலா பயணிகள் தேக்கடி ஏரியின் படகு போக்குவரத்தில் நீண்ட நேரம் சென்று மகிழ்ந்தனர். வரும் 25ம் தேதி ஓணம் பண்டிகை வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com