நெல்லை மாவட்டம் குற்றால அருவிகளில் நாளை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் ஐந்தருவில் தண்ணீர் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியின் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியதால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.