சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி

சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி
சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கொரோனா முதல் அலையைவிட இரண்டாம் அலையில் பல திரைத்துறை பிரபலங்களும், அரசியல்வாதிகளும் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தேர்தல் பரப்புரைக்குப் பிறகு அரசியல் தலைவர்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துவரும் நிலையில், தற்போது சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஏற்கெனவே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில் தற்போது சுற்றுலாத்துறை அமைச்சருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. உடல்நல பாதிப்பால் அமைச்சரவை கூட்டத்தில் 2 அமைச்சர்களும் கலந்து கொள்ளவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com