தேக்கடியில் 'கெவி' சுற்றுலாவுக்கு முன்பதிவு மையம் !

தேக்கடியில் 'கெவி' சுற்றுலாவுக்கு முன்பதிவு மையம் !
தேக்கடியில் 'கெவி' சுற்றுலாவுக்கு முன்பதிவு மையம் !

சுற்றுலா பயணிகளின் சிரமம் போக்கும் வகையில் சுற்றுலா தலமான “கெவி”க்கு புதிய முன் பதிவு மையம் தேக்கடி பெரியார் புலிகள் காப்பக நுழைவு வாயிலிலேயே துவக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான தேக்கடி உள்ளது. தேக்கடிக்கு தமிழகம், கேரளா மட்டுமல்லாது வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணிகள், தேக்கடி பெரியார் புலிகள் காப்பக கட்டுப்பாட்டில் உள்ள வல்லக்கடவு வனச்சரகத்திற்கு உட்பட்ட வண்டிப் பெரியாறில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் இயற்கை எழில் சூழ்ந்த “கெவி” என்னும் தலத்திற்கும் செல்ல விரும்புகின்றனர். ஆனால் “கெவி” செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான முன்பதிவு மையம் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தேனி- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் இருந்தது.

இதனால் சுற்றுலா பயணிகள் பலருக்கு “கெவி” குறித்து தெரியாமலும், தெரிந்தவர்கள் முன்பதி செய்யவும் அதிக சிரமம் கொண்டனர். அவர்களின் சிரமம் போக்க தேக்கடி பெரியார் புலிகள் காப்பக நுழைவுவாயில் அருகிலேயே ”கெவி” முன்பதிவு மையம் துவக்கப்பட்டுள்ளது. தேக்கடி பெரியார் புலிகள் காப்பக இணை இயக்குனர் ஷில்பா வி.குமார் துவக்கி வைத்தார்.

இது சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக அமையும் என அவர் தெரிவித்தார். “கெவி”க்கு வனத்துறை வாகனம் மூலம் வனத்திற்குள் சென்றுவர உணவுடன் சேர்ந்த்து ஒருவருக்கு 1,500 ரூபாயும், குழந்தைகளுக்கு பாதி கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இயற்கை எழில்மிகு வனப்பகுதிக்குள் சென்று வருவது, மலைகளின் ஊடே ஜீப்பில் பயணம், வனவிலங்குகளை காண்பது என சுற்றுலா பயணிகள் ”கெவி”க்கு செல்ல அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com