யார் 100-ஐ தொடுவது ? போட்டியில் ரூபாயும், பெட்ரோலும்

யார் 100-ஐ தொடுவது ? போட்டியில் ரூபாயும், பெட்ரோலும்

யார் 100-ஐ தொடுவது ? போட்டியில் ரூபாயும், பெட்ரோலும்
Published on

பைசா பைசாவாக ஏறிய பெட்ரோல் விலை தற்போது ரூ.90ஐ இந்தியாவின் சில பகுதிகளில் எட்டியிருக்கிறது. மற்ற பகுதிகளில் ரூ.80ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதற்கு மேல். மெல்ல மெல்ல பைசாவில் அதிகமாகி வரலாறு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது ரூ.72.66 ஆக உள்ளது. 

இப்படி ரூபாயும் பெட்ரோலும் மாறி மாறி மக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்து வரும் நிலையில் கேரளா நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தனது ட்விட்டரில் ஒரு பதிவை இட்டிருக்கிறார். அதில் 42வது நாளாக பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. மும்பையில் சில இடங்களில் ரூ90ஐ பெட்ரோல் விலை தாண்டியிருக்கிறது. இதனை பார்த்தால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை முந்தி , பெட்ரோல் சதம் அடித்து விடும் என தெரிகிறது என்று கூறியுள்ளார். 

இந்நிலையில் இதனை கட்டுப்படுத்துவது எப்படி என ஆர்.பி.ஐயிடம் விளக்கம் கேட்டுள்ளது மத்திய அரசு. டாலர் மதிப்பை குறைக்காமல் , பெட்ரோல் விலையை குறைப்பது சாத்தியமில்லை என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சில மாநிலங்கள் பெட்ரோல் மீதான வரியை குறைத்துள்ளன. ஆனாலும் விலை அதிக அளவில் குறையவில்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com