கோவை கவுன்சிலர் ரேஸ் - திமுக அதிமுகவினரிடையே கடும் போட்டி

கோவை கவுன்சிலர் ரேஸ் - திமுக அதிமுகவினரிடையே கடும் போட்டி

கோவை கவுன்சிலர் ரேஸ் - திமுக அதிமுகவினரிடையே கடும் போட்டி
Published on

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாநகராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட திமுக, அதிமுகவினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இரு கட்சியிலும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

கோவையில் உள்ள 33 பேரூராட்சிகளில், 329 கவுன்சிலர் இடங்கள் இருக்கின்றன. இதேபோல், பொள்ளாச்சி, வால்பாறை, மதுக்கரை, கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 7 நகராட்சிகள் உள்ளன. இந்த நகராட்சிகளில் 198 கவுன்சிலர் இடங்கள் காலியாக உள்ளன. இதற்காக திமுக மற்றும் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனு அளித்துள்ளனர். கோவை மாநகராட்சியில் உள்ள நூறு வார்டுகளில், 50 வார்டுகள் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு வார்டில் போட்டியிட குறைந்தபட்சம் 10 பேர் முதல் அதிகபட்சமாக 40 பேர் வரை விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளனர். திமுக சார்பில் விருப்ப மனுத் தாக்கல் செய்தவர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி நேர்காணல் நடத்தியுள்ளார். கூட்டணி கட்சிகளுக்கான இட ஒதுக்கீடு முடிந்ததும் திமுக வேட்பாளர்களின் விவரங்கள் வெளியாகும் என தெரிகிறது. அதே போல், அதிமுக சார்பில் விருப்ப மனுத் தாக்கல் செய்தவர்களிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேர்காணல் நடத்தி வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com