#TopNews முதல்வருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த பெற்றோர் முதல் ஆர்பிஐயின் அறிவிப்பு வரை

#TopNews முதல்வருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த பெற்றோர் முதல் ஆர்பிஐயின் அறிவிப்பு வரை

#TopNews முதல்வருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த பெற்றோர் முதல் ஆர்பிஐயின் அறிவிப்பு வரை
Published on

மருத்துவக் கல்லூரிகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைத்தது பொன்னான நாள் என முதலமைச்சர் பெருமிதம். உள்ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்த மாணாக்கர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கி முதலமைச்சர் பேச்சு

இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்த மாணவர்கள் நெகிழ்ச்சி. பிள்ளைகளின் கனவு ஈடேறுவதால் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த பெற்றோர்

பிற மாநில மாணவர்கள் தமிழக மருத்துவ தரவரிசை பட்டியலில் இடம் பெற்றது குறித்து மு.க ஸ்டாலின் கேள்வி. எவ்வித முறைகேடும் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்.

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய எவ்வளவு நாள் ஆகும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி. ஆன்லைன் சூதாட்‌டத்‌தை ‌தடை செய்ய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தமிழக அரசு பதில்.

லஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அச்சப்பட வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு. முதலீடுகளை திருப்பிச் செலுத்துவதற்கு போதிய பணம் வங்கியிடம் இருப்பதாகவும் விளக்கம்

10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா?அடுத்தமாத இறுதியில் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் பதில்.

மார்ச் மாதம் வரை திரைப்படங்களை சிக்கலின்றி வெளியிட ஏற்பாடு.தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், டிஜிட்டல் நிறுவனங்களின் பேச்சில் உடன்பாடு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது 280 கோடி ரூபாய் நிதி மோசடிப் புகார்கள். ஆடிட்டர் துணையுடன் விசாரணை நடத்தப்படும் என ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தகவல்

ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ் தொடரில் சேர்க்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு. தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என முன்னாள் வீரர்கள் கருத்து.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com