#Topnews | கொட்டித்தீர்த்த மழை... ஜார்க்கண்ட் தேர்தல்

#Topnews | கொட்டித்தீர்த்த மழை... ஜார்க்கண்ட் தேர்தல்
#Topnews | கொட்டித்தீர்த்த மழை... ஜார்க்கண்ட் தேர்தல்

சென்னை, புதுக்கோட்டை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவில் கொட்டித்தீர்த்த கனமழை; பல இடங்களில் மழைநீர் தேக்கம்

தென்கிழக்கு அரபிக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது; தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை.

5,027 கோடி ரூபாய் முதலீட்டில் 9 நிறுவனங்கள் தொடங்குவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டை தொழில் மையமாக மாற்ற அரசு முயற்சி எடுக்கும் என உறுதி 

பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா - ஜப்பான் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

ராதாரவியைத் தொடர்ந்து நடிகை நமீதாவும் பாஜகவில் இணைந்தார். இருவரும் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் சேர்ந்தனர்.

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. முதல் கட்டத்தில் 62.87 சதவிகித வாக்குகள் பதிவாகின.

தெலங்கானாவில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பல இடங்களில் மகளிர் அமைப்புகள் போராட்டம்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு வெற்றி. சபாநாயகர் மாற்றப்பட்டதை கண்டித்து பட்னாவிஸ் தலைமையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com