டாப் 13 தேர்தல் களம்: எடப்பாடி பழனிசாமி-ராசா வார்த்தை மோதல் முதல் உதயநிதி மீதான புகார் வரை

டாப் 13 தேர்தல் களம்: எடப்பாடி பழனிசாமி-ராசா வார்த்தை மோதல் முதல் உதயநிதி மீதான புகார் வரை
டாப் 13 தேர்தல் களம்: எடப்பாடி பழனிசாமி-ராசா வார்த்தை மோதல் முதல் உதயநிதி மீதான புகார் வரை

* திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் காலணியுடன் ஒப்பிட்டு திமுக எம்பி ஆ.ராசா தன்னை விமர்சித்திருந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதற்கு மதுரை பரப்புரையின்போது பதிலளித்துள்ளார். விரிவாக வாசிக்க > “நான் ஏழை அப்படித்தான் இருப்பேன்” - ஆ.ராசா விமர்சனத்திற்கு முதல்வர் பழனிசாமி பதிலடி

* திமுகவுக்கு அதிமுக மாற்று அல்ல; இரு கட்சித் தலைவர்கள் பெயரிலும் மதுபான ஆலைகள் செயல்படுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டினார்.  விரிவாக வாசிக்க > “திமுகவுக்கு அதிமுக மாற்று அல்ல; நாங்கள் டென்மார்க் நிர்வாகத்தை தருவோம்” - சீமான்

* மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நிவேதா எம். முருகன், கரும்புச்சாறு பிழிந்து கொடுத்து மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விரிவாக வாசிக்க > பரப்புரை அதகளங்கள்.. கரும்புச்சாறு பிழிந்து கொடுத்து வாக்கு சேகரித்த வேட்பாளர்!

* வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான அவசரம் என்ன உள்ளிட்ட பல கேள்விகளுக்கு புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் பதிலளித்தார் சகாயம். முழுமையான நேர்காணலை காண > "எனக்கு சுயமரியாதையை போதித்தவர் பெரியார்" - சகாயம் ஐஏஎஸ் சிறப்பு நேர்காணல்

* ஒசூர் மாநகரில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசிக்கக்கூடிய பகுதியில் அதிமுக வேட்பாளர் உருது மொழியில் பேசி வாக்கு சேகரித்தார். விரிவாக வாசிக்க > பரப்புரையில் உருது மொழியில் பேசி வாக்கு சேகரித்த ஒசூர் அதிமுக வேட்பாளர்

* கோவை தெற்கு தொகுதியில் பரப்புரையின் போது பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு நடிகை நமீதா நடனம் ஆட கற்றுக் கொடுத்தார். விரிவாக வாசிக்க > வாத்தி கம்மிங்: பரப்புரையில் வானதி சீனிவாசனுக்கு நடனமாட கற்றுக் கொடுத்த நமீதா!

* ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை கடைபிடிக்கிறோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க > “ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை கடைபிடிக்கிறோம்” - மு.க.ஸ்டாலின்

* திமுகவை வீழ்த்த தன் உயிரே போனாலும் பரவாயில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். விரிவாக வாசிக்க > திமுகவை வீழ்த்த என் உயிரே போனாலும் பரவாயில்லை - முதலமைச்சர் பழனிசாமி

* வித்தியாசமான முறையில் கமலின் முகமூடி அணிந்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். விரிவாக வாசிக்க > கமல்ஹாசனின் முகமூடி அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வந்தவாசி மநீம நிர்வாகிகள்

* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்த செங்கல்லை திருடியதாக உதயநிதி ஸ்டாலின் மீது பாஜக நிர்வாகி விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விரிவாக வாசிக்க > “மதுரை எய்ம்ஸ் வளாகத்தில் இருந்த செங்கல்லை திருவிட்டார்”- உதயநிதிமீது பாஜக நிர்வாகி புகார்

* ஜோலார்பேட்டை தொகுதியில் பரப்புரைக்கு வந்த அமைச்சர் வீரமணிக்கு ஜேசிபி இயந்திரத்தின் மூலம் 500 கிலோ எடையுள்ள மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. விரிவாக வாசிக்க > அமைச்சர் வீரமணிக்கு ஜேசிபி இயந்திரம் மூலம் 500 கிலோ மலர்தூவி வரவேற்பு

* கரூரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு வாக்கு சேகரிக்க வந்த காயத்ரி ரகுராம் நாட்டியமாடி வாக்கு சேகரித்தார். உற்சாகமான வேட்பாளர் அண்ணாமலையும் பொதுமக்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டது பொதுமக்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது. விரிவாக வாசிக்க > 'தாமரை மலரட்டும்... தமிழகம் வளரட்டும்' பாடலுக்கு குத்தாட்டம் ஆடிய அண்ணாமலை

* திமுகவின் தேர்தல் அறிக்கையில் கலப்புத் திருமண ஊக்கத்தொகை தொடர்பான வாக்குறுதி குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறாக காணொலி வெளியிட்ட பெண்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், காணொலியை சமூக வலைதளங்களிலிருந்து நீக்கவும் காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விரிவாக வாசிக்க > கலப்பு திருமண வாக்குறுதி: திமுக மீது அவதூறு பரப்பிய பெண் மீது நடவடிக்கை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com